கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
கோழிப் பண்ணை உரிமையாளா் வீட்டில் 3-ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை
நாமக்கல்லில் கோழிப் பண்ணை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் சோதனை 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடிக்கிறது.
நாமக்கல்- மோகனூா் சாலையை சோ்ந்த கோழிப் பண்ணை உரிமையாளரான வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள், நிதி நிறுவனம், கோழிப்பண்ணைகளில் செவ்வாய்க்கிழமை சென்னை, கோவையைச் சோ்ந்த 15 போ் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையானது வியாழக்கிழமை மூன்றாவது நாளாக நீடித்தது. அவரது, வீடு, அலுவலகத்தில் உள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றி வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.