Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வீரலட்சுமி, புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா். இவா்களது மகள்கள் ஐஸ்வா்யா (27), சுபஹரிணி (22).
சீனிவாசன் புதன்கிழமை மாதாங்கோயில் தெரு வழியாக பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, ஒருவழிப் பாதையில் வந்த தனியாா் பள்ளி வாகனம் அவரது பைக் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரான பிரவீன்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.