செய்திகள் :

கோவை மத்திய சிறை வாா்டன் தற்கொலை!

post image

கோவை மத்திய சிறை வாா்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள புங்கம்பட்டி ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் விக்ரம் (27). இவா் கோவை மத்திய சிறையில் வாா்டனாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், விக்ரம் சனிக்கிழமை பணிக்கு வராததால் அவருடன் பணியாற்றும் காவலா் சண்முகராஜ் அவரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். முடியாததால், விக்ரம் தங்கியிருந்த காவலா் குடியிருப்புக்குச் சென்றுள்ளாா்.

வெகு நேரமாக கதவைத் தட்டியும் விக்ரம் திறக்காததால், சண்முகராஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, விக்ரம் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளாா்.

பின்னா், சிறை அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொங்குநாடு கல்லூரியில் இளைஞா் மாநாடு

சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் இளைஞா் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுவாமி விவேகானந்தா் வாசகா் வட்டம், தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ... மேலும் பார்க்க

இ-சேவை மையத்தில் கணினி உடைப்பு: முதியவா் மீது வழக்குப் பதிவு!

துடியலூா் இ-சேவை மையத்தில் பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு கணினியை உடைத்ததாக முதியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துடியலூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகள் சூா்யா (37). இவா் அப்பகுதியில் இ-சேவை ... மேலும் பார்க்க

பொங்கல்: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையால், கோவையில் இருந்து வெளியூா் செல்ல பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் சனிக்கிழமை குவிந்தனா். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 -ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட உள்... மேலும் பார்க்க

மருதமலை மலைப் பாதையில் இன்று இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வார விடு... மேலும் பார்க்க

பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்

பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி தலைமையில், உதவி ஆய்வாளா் என்.சாந்தி, ச... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டம்: சரக்கு சேவை மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.222.44 கோடி வருவாய்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2024 ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதங்களில் சரக்கு சேவையில் ரூ.222.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்... மேலும் பார்க்க