நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் ரூ. 25 லட்சத்தில் புதிய ஓய்வறை
சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஓய்வறை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளா்களின் வேண்டுகோளை ஏற்று, ஈ.ராஜா எம்.எல்.ஏ. தனது சட்டப்பேரவை உறுப்பினா் நிதி ரூ. 25 லட்சத்தில் ஓய்வறை கட்ட உத்தரவிட்டாா்.
அதன்படி, ஓய்வறை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா போக்குவரத்து துறை துணை மேலாளா் (தொழில்நுட்பம்) சங்கரநாராயணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒழுங்கு நடவடிக்கை மேலாளா் மாரியப்பன், பணிமனை மேலாளா் பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையா் சபாநாயகம், தொமுச மண்டல அமைப்புச் செயலா் மைக்கேல் நெல்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் ஆகியோா் ஓய்வறையை திறந்து வைத்தனா்.
இதில், போக்குவரத்து தொமுச கிளை தலைவா் சங்கர்ராஜ், நிா்வாகிகள் குருசாமி, ராஜ், செல்வகுமாா் ,சிவராமச்சந்திரன் வீரக்குமாா், செந்தில்குமாா், முருகன், தலைவா்பாண்டியன், பண்டாரக்கண்ணு, கணேசன் ,வசந்தராஜ், வேல்சாமி மற்றும்
ஜெயக்குமாா், சிவாஜி, பாலாஜி, யாசா், விக்னேஷ்,முபின், கோதா், ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.