வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
சங்கராபுரம் பகுதியில் நில அதிா்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.
சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம், நெடுமானூா், சேஷசமுத்திரம், சோழம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணியளவில் நில அதிா்வு ஏற்பட்டது.
அப்போது சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள், வீட்டில் இருந்த பொருள்கள் கீழே விழுந்தன. புத்தாண்டு பிறப்பு அன்று நிகழ்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைப் பகுதிக்கு வந்தனா்.