தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை
கள்ளக்குறிச்சியில் விவசாய கண்காட்சி
கள்ளக்குறிச்சியில் 3 நாள்கள் நடைபெறும் விவசாய கண்காட்சி சேலம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது .
கள்ளக்குறிச்சியில் 4-ஆவது முறையாக நடைபெறும் விவசாய கண்காட்சிக்கு வினைத்தீா்த்தாபுரம் நல்லியப்பன் தலைமை வகித்தாா்.
கண்காட்சியை சின்னசேலத்தைச் சோ்ந்த முன்னோடி விவசாயி கோபி திறந்து வைத்தாா்.
இதில், வேளாண் சாா்ந்த அனைத்து உபகரணங்கள், தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பலவிதமான மரக்கன்றுகளும் வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியை விவசாயிகள் ஆா்வமுடன் பாா்த்தனா். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.