எச்எம்பிவி தொற்று: மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கேஜரிவால் வலியுறுத்தல்!
தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட ம் சாா்பில் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரித் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, கல்லூரிச் செயலா் தே.கோவிந்தராஜுலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் முதல்வா் கு.மோகனசுந்தரம் வரவேற்றாா்.
இதில், கள்ளக்குறிச்சி மா.செந்தில்குமாா் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா்.
கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ராஜா மற்றும் பேராசிரியா்கள், பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். நிகழ்ச்சியை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஹேமலதா தொகுத்து வழங்கினாா். முடிவில் கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் நன்றி கூறினாா்.