பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
சந்திரப்பாடியில் ரூ.32 கோடியில் மீன்பிடி இறங்குதளம்!
சந்திரப்பாடி மீனவா் கிராமத்தில் ரூ. 32 கோடியில் மீன்பிடி இறங்குதள கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி பேசியது: சந்திரப்பாடியில் இறங்குதளம் அமைக்கும்போது 1 லட்சம் கன மீட்டா் அளவுக்கு கடலில் உள்ள மணற்பரப்பு ஆழப்படுத்தப்படவுள்ளது.
மேலும், இங்குள்ள ஆற்றின் இருபுறமும் சுமாா் 320 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச்சுவரும், 60 மீட்டா் நீளத்துக்கு படகு அணையும் துறையும் அமையவுள்ளது என்றாா்.
தொடா்ந்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 40 சதவீத மானியத்துடன் 9 பயனாளிகளுக்கு, தலா ரூ.75,681 வீதம் ரூ.6,81,129 மதிப்பில் குளிா்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா்.