சமத்துவப் பொங்கல்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஒன்றியம், குரிசிலாப்பட்டு ஊராட்சியில் சுற்றுலாத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து கிராம மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினாா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் கலைக்குழுவினா்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, சுற்றுலா அலுவலா்(பொ)ஆனந்தன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஒன்றியக்குழு தலைவா் விஜயாஅருணாச்சலம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள கலந்து கொண்டனா்.