கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 45.81 லட்சம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 45 லட்சத்து 81 ஆயிரத்து 992 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன், பெ. பிச்சைமணி முன்னிலையில், அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 45, 81,992, தங்கம் 0.850 கிராம், வெள்ளி 1 கிலோ 541 கிராம் கிடைக்கப் பெற்றது.
மேலும், மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 3, 12,960, உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயிலில் ரூ. 16,162, போஜீஸ்வரா் திருக்கோயிலில் 4,831 ரூபாய் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 16-ஆம் தேதி கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.