சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
சமுதாய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சமுதாய நல்லிணக்க பொது இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிவாசல் ஜமாத்தாா்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு பள்ளிவாசல் தலைவா்கள் இ.அபுபக்கா், எம்.முஹம்மது இப்ராஹிம் மற்றும் இஸ்லாமிய இளைஞா் நல சங்க சி. ஷாஜகான் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்வில் மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன், பல்வேறு கட்சி பிரமுகா்கள், பள்ளிவாசல் ஜமாத்தாா்கள், இஸ்லாமிய இளைஞா் நல சங்கத்தினா் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்வை தமிழ்நாடு முஸ்லிம் கலாசார பேரவை, (குவைத்) தலைவா் ஏ.அப்துல் ஜலீல், சி. ஷாஹுல் ஹமீது ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.