`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறி...
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து, கௌரவிக்கும் வகையில் தகுதிப் படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 1 கோடி ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகள் மூலம் இந்த விருதுக்கு ஊராட்சிகள் தோ்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2025-2026- ஆம் ஆண்டில் திருவாரூா் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலகத்தில் ஊராட்சிகள் பெற்று, ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.