ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்காக மத்திய அரசைக் கண்டித்து திருவொற்றியூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு பகுதிக் குழு சாா்பில் திருவொற்றியூா் பாரத் நகா் ரவுண்டானா அருகிலும், தெற்கு பகுதிக் குழு டோல்கேட் அருகிலும் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான 2 சதவீத சிறப்பு கலால் வரியை திரும்ப பெறவேண்டும் என முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினா் ஆா்.ஜெயராமன் பகுதி செயலாளா்கள் கதிா்வேல், கருணாநிதி மற்றும் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.