ராஜேஷ்: "தேடல் உள்ள கலைஞர்... பெரும் வருத்தம்" - கமல்ஹாசன் இரங்கல்!
சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!
பங்குச் சந்தை நேற்று சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(புதன்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,457.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:40 மணி நிலவரப்படி 222.82 புள்ளிகள் குறைந்து 81,326.58 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 81,613.36 என்ற புள்ளிகள் வரை சென்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68.65 புள்ளிகள் குறைந்து 24,757.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்டிஎப்சி லைப், அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் 8% வரை உயர்ந்தன.
ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, அப்பல்லோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.