மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவு...
பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!
புதுதில்லி: காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனமானது தனது செயல்பாட்டிலிருந்து ரூ.58 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இந்த காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.788 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் அது ரூ.798 கோடியாக இருந்தது என்று பாட்டா இந்தியா தெரிவித்துள்ளது.
தேவையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கடந்து சென்ற போதிலும், நாங்கள் சரியான எண்களை பெற முடிந்தது என்றார் பாட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குஞ்சன் ஷா.
செப்டம்பர் 2024ல் ஏற்கனவே செலுத்தப்பட்ட ஒரு பங்கிற்கு ரூ.10 என்ற இடைக்கால ஈவுத்தொகையுடன் கூடுதலாக, ஒரு பங்கிற்கு ரூ.9 இறுதி ஈவுத்தொகையை அதன் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பாட்டா இந்தியாவின் பங்குகள் 0.29 சதவிகிதம் குறைந்து ரூ.1,275.60 ஆக மும்பை பங்குச் சந்தையில் முடிவடைந்தது.
இதையும் படிக்க: கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!