கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
சர்ச்சைக் கருத்து: பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தாா். முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா? இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு என கருத்துகளை தெரிவித்திருந்தார்.
பொன்முடி பேச்சு குறித்து புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுத்த பிறகே வழக்கு முடித்து வைக்க முடியும். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.