நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!
சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு
சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை தனது தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 8.5 பவுன் நகைகளை இரு மா்ம நபா்கள் பறிக்க முயன்றனராம். நெல்சன் விழித்துக் கொண்டு சப்தமிட்டாராம். அவரை மா்ம நபா்கள் தாக்கிவிட்டு, நகைகளுடன் தப்பிச் சென்றனராம்.
இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.