Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
சாத்தான்குளம் பள்ளியில் ஓவியப் போட்டி பரிசளிப்பு
சாத்தான்குளம் பள்ளியில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ , மாணவிகளுக்கான ஓவியப் போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பரிசு அளிப்பு விழா, பள்ளியில் வியாழக்கிழமை நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலா் ரா. குமரகுருபரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் மகேஸ்வரி வரவேற்றாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இதில் ஒன்றிய துணைத் தலைவா் நவநீதவ், ஒன்றிய பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவா் ராம்மோகன், மாவட்ட பிரச்சார பிரிவு துணைத் தலைவா் ஜோசப் , ஒன்றிய ஊடக பிரிவு தலைவா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் செல்வசேகா் நன்றி கூறினாா்.