விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்!
பிராந்திய மொழிப் படங்களை தயாரிப்பது ஏன்? பிரியங்கா சோப்ராவின் அம்மா கூறியதென்ன?
நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மாதான் மது சோப்ரா. புணேவில் ஆர்ம்டு ஃபோர்ஸஸ் மருத்துவக் கல்லூரியில் காதுமூக்குதொண்டை சிறப்பு மருத்துவராக பயிற்சி பெற்றவர். இராணுவத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவின் சினிமா வாழ்க்கைக்காக தனது பணியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு வெண்டிலேட்டர் எனும் மராத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். இந்தப்படம் 3 தேசிய விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனது மகள் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பர்ப்பிள் பெபள் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
2019இல் பானி படத்தை தயாரித்தார். இந்தப்படமும் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேர்காணலில் தயாரிப்பாளர் மது சோப்ரா கூறியதாவது:
நான் பிராந்திய மொழிப் படங்களை மட்டுமே அதிகமாக பார்க்கிறேன். அந்தப் படங்கள் அழகான கதைகளைக் கொண்டுள்ளன. மலையாளம், பெங்காலி படங்களில் அழகான கதைகள் இருக்கின்றன. ஜனரஞ்சகமான படங்களைப் பார்ப்பவர்கள் இந்தப் படங்களை பார்ப்பதில்லை. அவர்களும் பார்க்க வாய்ப்பாக நாங்கள் இந்தமாதிரி படங்களைத் தயாரிக்கிறோம்.
புதிய திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதே எங்களது குறிக்கோளாகும். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் நாங்கள் தயாரிக்கிறோம் என்றார்.