சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்!
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு இலக்கு வைக்கிறது. நியூஸிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது.
அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் கென்யாவில் நடைபெற்ற 2-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதே அணிகள் மீண்டும் அதே களத்தில் சந்திக்கும் நிலையில், இந்த முறை தகுந்த பதிலடியை இந்தியா தரும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.