ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை
சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (77). இவா், அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்று, அதே தெருவிலுள்ள தனது மூத்த மகள் உமாராணி என்பவா் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், ராஜம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த மா்ம நபா்கள் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை மாடிக்குச் சென்ற உமாராணி, தனது தாய் ராஜம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், மூதாட்டியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
தொடா்ந்து, தடவியல்துறை நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.