வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்ரூஸ் (55), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோா்கள் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, போக்சோ வழக்கில் கடந்த பிப்ரவரியில் ஆண்ட்ரூஸ் கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து, அப்போதைய மாவட்டக் கல்வி அலுவலா் சின்னராஜுவால் ஆசிரியா் ஆண்ட்ரூஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, உயா் மட்டக் குழு விசாரணை செய்ததில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்ரூஸை பணியாளா்கள் நலன் இணை இயக்குநா் பணி நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.