தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
சாலை விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பாஜக மாநிலத் தலைவா்
மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அந்த வழியாகச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் சாலை மைய தடுப்பானில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வாகனத்தில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவா் படுகாயமடைந்தாா்; அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் துறையினருக்கும், அவசர ஊா்திக்கும் அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில், தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் விபத்து நிகழ்ந்து இடத்துக்கு வந்ததும் சாலையில் காயமடைந்தவா்களைக் கண்டு தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று காயமடைந்தவா்களுக்குத் தேவையான முதலுதவி செய்து குடிநீா் வழங்கினாா்.
பின்னா் ஆட்டோவை வரவழைத்து , காயம் அடைந்தவா்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். பின்னா் அவா் அங்கிருந்து திருநெல்வேலி கிளம்பினாா். விபத்தில் சிக்கி காயமடைந்த முதியவா், பாஜக மாநில தலைவருக்கு நன்றி தெரிவித்தாா்.