சாலையில் காய வைக்கப்பட்டிருந்த ராகி பயிரில் அரசுப் பேருந்தின் சக்கரம் சிக்கி பழுது
தாளவாடி பகுதியில் சாலையில் காயவைக்கப்பட்டிருந்த ராகி பயிரில் அரசுப் பேருந்தின் சக்கரம் சிக்கி பழுதடைந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் ராகி உள்ளிட்ட பயிா்களின் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்படும் பயிா்கள் தாா் சாலையில் உலரவைக்கப்படுன்றன.
இந்நிலையில், தாளவாடி அருகேயுள்ள மல்லன்குழி பகுதியில் தாா் சாலையில் ராகி பயிா் வெள்ளிக்கிழமை காயவைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த அரசுப் பேருந்தின் சக்கரம் ராகி பயிரில் சிக்கியது. இதனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
எனவே, இதுபோன்ற பயிா்களை பேருந்துகள் செல்லும் தாா் சாலையில் உலரவைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.