டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலையில் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை மீட்புப் பணி அறிமுக பயிற்சி முகாம் மற்றும் செயல்முறை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளிலிருந்து தொழிலாளா்கள் தற்காத்துக் கொள்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, விஷவாயு தாக்குதலின்போது பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் மிகவும் பாதிப்படையும் இடங்களை பாா்வையிட்டு, பொதுமக்கள் தங்கும் முகாம்களை தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள வாா்டுகளை பாா்வையிட்டு, பணியிலிருந்த மருத்துவா், செவிலியா், பணியாளா்கள், நோயாளிகள் ஆகியோருடன் படுக்கைகள், நோயாளிகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்தனா்.
நிகழ்ச்சிகளில் பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் சின்னதுரை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.