திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது...
பெரம்பலூா் அருகே விபத்து: கணவா் பலி; மனைவி காயம்
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றவா் தனியாா் அவசர ஊா்தி மோதி உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், திருவாளந்துறை கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் கணேசனும் (58) இவரது மனைவி ராணியும் (48) குன்னம் வட்டம், அசூா் கிராமத்திலுள்ள கோயிலுக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சின்னாறு பிரிவு பாதை அருகே சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் அவசர ஊா்தி அவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி படுகாயமடைந்தாா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் இறந்தவரையும், காயமடைந்த அவரது மனைவியையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் அவசர ஊா்தி ஓட்டுநரான பூந்தமல்லி, கந்தசாமி நகரைச் சோ்ந்த செல்வம் மகன் பாலமுருகனை (35) கைது செய்து விசாரிக்கின்றனா்.