"விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்; இப்போது மார்க்சிஸ்ட் மாணவன்" - வெற்றி மாறன் ஓ...
பெரம்பலூா் அருகே மாணவி பலாத்காரம் கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே 14 வயதுப் பள்ளி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
வேலூா் மாவட்டம், வன்னிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் பிரபு (33). இவா் பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தில் தங்கி கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தபோது, 14 வயதுப் பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி, கடந்த 10.8.2015-இல் தனது பைக்கில் வேலூருக்கு கடத்திச் சென்று, உறவினா் வீட்டில் தங்கவைத்து பலாத்காரம் செய்தாா்.
இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வி.களத்தூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் அவா் வெளியேவந்தாா்.
இந்நிலையில் இவ் வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, பிரபுவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா். இதையடுத்து வி.களத்தூா் போலீஸாா் பிரபுவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். அரசுத் தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் சுந்தரராஜன் ஆஜரானாா்.