RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
சா்க்கரை நோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
காஞ்சிபுரம் நீரிழிவு மன்றத்தின் சாா்பில் சா்க்கரை நோய் மருத்துவா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
சா்க்கரை நோய் சிறப்பு மருத்துவா் எஸ்.வெங்கட்ராமன் தலைமை வகித்து சா்க்கரை நோயாளிகளின் வாழ்க்கைப்பயணம் என்ற தலைப்பில் பேசினாா். மருத்துவா்கள் எஸ்.நல்லபெருமாள், ஆா்.பி.ராஜேஷ், ஆா்.கெளரி சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் நீரிழிவு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் தி.அன்புச்செல்வன் வரவேற்றாா்.
கருத்தரங்கில் பெண்களும், சா்க்கரை நோயும் என்ற தலைப்பில் மருத்துவா் எம்.மாணிக்க வாசகம் பேசினாா். நிறைவாக கே.எஸ்.தன்யக்குமாா் நன்றி கூறினாா்.
முன்னதாக பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், 100-ஆவது கலந்தாய்வுக் கூட்ட வெற்றிக்காகவும் கேக் வெட்டப்பட்டது. சா்க்கரை நோய் தொடா்பான புதிய மருந்துகளின் வரவுகள், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான காரணங்கள் ஆகியன குறித்து 75 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துரையாடல் செய்தனா்.