செய்திகள் :

சா்ச்சை கருத்து: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

post image

சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளா்கள் குறித்து சா்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகா் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளா்கள் குறித்து தரக்குறைவாக விமா்சிக்கப்பட்டதை நடிகா் எஸ்.வி.சேகா் தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்தாா். இதைத் தொடா்ந்து அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகா் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ. 15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் எஸ்.வி.சேகா் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகா் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கில் இறுதி தீா்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகா் எஸ்.வி. சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முனியப்பன் (46). இவா், அண்ணா... மேலும் பார்க்க

ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்

வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் வ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது

சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா். பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு ந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சல... மேலும் பார்க்க

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க