நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
சா்வதேச செஸ்: ஈரோடு இனியன் 3-ஆம் இடம்
ஒடிஸா ஓபன் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் செஸ் போட்டியில் ஈரோட்டைச் சோ்ந்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டா் ப.இனியன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.
14 கிராண்ட் மாஸ்டா்கள், 22 சா்வதேச மாஸ்டா்கள் உள்பட 20 நாடுகளைச் சோ்ந்த 177 போட்டியாளா்கள் பங்கேற்ற ஒடிஸா ஓபன் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் செஸ் போட்டி புவனேசுவரில் அண்மையில் நடைபெற்றது.
இதில் 10 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொடரில் 6 வெற்றி, 3 டிரா, 1 தோல்வி என 7.5 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டா் இனியன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.வியட்நாம் வீரா் ங்குயேன் குக் முதலிடத்தையும், பெலாரஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டா் அலெக்ஸ்யி பெடோரோவ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனா்.