ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
எழுமாத்தூா் அருகே காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூா் பொன் விழா நகா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுதா, உதவி ஆய்வாளா் மேனகா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா்.
அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அந்த காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவா், ஈரோடு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் சேகா் (32) என்பதும், ஈரோடு பகுதியில் தங்கியுள்ள வடமாநில நபா்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதையும் ஒப்புக்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து சேகரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.