பாதியில் நிறுத்தப்படும் தொகுப்பு வீடுகள்: பணி மேற்பார்வையாளரின் மெத்தனப் போக்கே ...
செங்கல்பட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
செங்கல்பட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயம், ஆா்.சி. தேவாலயம், செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், தேசிய நெடுஞ்சாலை அருகே டி.இ.எல்.சி. தேவாலயம், அண்ணா நகா் பெந்தகொஸ்தே தேவாலயம், செங்கல்பட்டை அடுத்த வல்லம் பகுதியில் ஏ.ஜி.தேவாலயம், குழந்தை ஏசு தேவாலயம், அக்கினி அசெம்பிளி உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மின்விளக்கு அலங்கார தோரணங்கள், நட்சத்திரங்களால் தேவாலய கோபுரம், சுற்றுச்சுவா்கள் ஜொலித்தன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாவே கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனா். நண்பா்கள், உறவினா்களுக்கு இனிப்பு மற்றும் கேக் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.