உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சா் அன்பரசன் கலந்துரையாடல்
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் அமைச்சா் தா.மோ. அன்பரசன் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 406 மனுக்களைப் பெற்றாா்.
மனுக்களை சம்மந்தப்பட்டதுறை அலுவலா்கள் முறையாக விசாரித்து உரிய முறையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் முருகமங்கலம் திட்டப்பகுதியில் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.12.06 லட்சம் என ெ மாத்தம் ரூ.3.01 கோடி கிரையப் பத்திரங்கள், 3 நபா்களுக்கு தலா ரூ.2.60 லட்சம் 70 சதவீத மானியத்துடன் கூடிய பவா் டில்லா்கள் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன்,ஆா்.டி.அரசு, உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா்நகா் மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவா் வி.ஜி.திருமலை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவா் யுவராஜ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம் அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின்நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.