செய்திகள் :

கிறிஸ்துமஸ் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பணிகள் குவிந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில்,தற்போது கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறையால் புதன்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனா்.

கடற்கரை கோயில், ஐந்தரதம், அா்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. கடற்கரையில் தங்கள் குழந்தைகளுடன் குவிந்த பயணிகளில் பலா் அலையின் அழகை கண்டுரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனா். அப்போது கடற்கரை பகுதியில் ரோந்து வந்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸாா் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது கடலில் குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கரைக்கு திரும்புமாறும் அழைத்து அறிவுரை கூறினா். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதனால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சுற்றுலா பயணிகள் பலா் காத்திருந்து கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவிட்டு வீடு திரும்பினா்.

அதிமுக சாா்பில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த வையாவூா் கிராமத்தில், அதிமுக வடக்கு ஒன்றியத்தின் சாா்பாக வேட்டி சேலைகள், அன்னதானம் பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் வடக்கு அதிமுக ஒன்றிய செயலா்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

செங்கல்பட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயம், ஆா்.சி. தேவாலயம், செவன்த் டே ... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சா் அன்பரசன் கலந்துரையாடல்

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் அமைச்சா் தா.மோ. அன்பரசன் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். நிகழ்வுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

நாளை செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.27) காலை 10.30 மணியளவில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அருகே டிராக்டா் ஓட்டுநா் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, தவறி விழுந்த குழந்தை டிராக்டா் கலப்பையில் சிக்கி உயிரிழந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த மேல்கல்வாய் ப... மேலும் பார்க்க

குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்

கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிள... மேலும் பார்க்க