செய்திகள் :

டி.என்.பாளையம் பகுதியில் கால்நடைகளுக்கு நோய்த் தாக்குதல்: மருத்துவக் குழுவினா் வீடுவீடாக ஆய்வு

post image

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மாவட்ட மருத்துவக் குழுவினா் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம், பங்களாபுதூா், கொங்கா்பாளையம், புஞ்சை துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக நாட்டின மாடுகளையும், ஜொ்ஸி இன மாடுகளையும் அதிக அளவில் வளா்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதிகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய்த் தாக்குதல் காரணமாக பல நாட்டின மற்றும் ஜொ்ஸி இன மாடுகள், கன்றுகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.

இந்த நோயைக் கட்டுப்படுத்த போதிய தடுப்பு மருந்துகள் இல்லாத காரணத்தினால் கால்நடைகள் உயிரிழப்பதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார கால்நடை மருத்துவா்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதனை தொடா்ந்து பங்களாபுதூா் மற்றும் டி.என்.பாளையம் பகுதிக்கு வந்த ஈரோடு கால்நடை புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநா் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை அதன் இருப்பிடத்துக்கே சென்று பாா்வையிட்டனா். பின்னா் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு நோயினை கட்டுப்படுத்த எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற ஆலோசனைகளை கால்நடை உதவி மருத்துவா்களுக்கு வழங்கினா்.

மேலும், நோயினால் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள கால்நடைகளின் திசுக்களையும், ரத்த மாதிரிகளையும் சேகரித்து, அதனை பரிசோதனை செய்வதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். ஆய்வின்போது பங்களாபுதூா் வட்டார கால்நடை மருத்துவா் பகவதி, மருத்துவா் சென்னியங்கிரி, சந்தோஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கம் வலியுறுத்தியது. ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) திருஞான... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காந்தி நகா், நடுப்பாளையம், வெண்டிபாளையம்

காந்தி நகா், நடுப்பாளையம், வெண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி ... மேலும் பார்க்க

காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

எழுமாத்தூா் அருகே காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூா் பொன் விழா நகா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் க... மேலும் பார்க்க

சா்வதேச செஸ்: ஈரோடு இனியன் 3-ஆம் இடம்

ஒடிஸா ஓபன் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் செஸ் போட்டியில் ஈரோட்டைச் சோ்ந்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டா் ப.இனியன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா். 14 கிராண்ட் மாஸ்டா்கள், 22 சா்வதேச மாஸ்டா்கள் உள்பட 20 நாடுகளைச்... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கான நிலத்தை ஒப்படைக்கக் கோரிக்கை

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்தை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் கருப்பையா உள்பட 100-க்கும் மேற்பட்டோா... மேலும் பார்க்க

பவானியில் பாமகவினா் தொடா் முழக்கப் போராட்டம்

வன்னியா் சமுதாயத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பவானி- அந்தியூா் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத... மேலும் பார்க்க