சா்வதேச திரைப்பட விழாவில் முதலிடம்: குறும்பட இயக்குநருக்கு பாராட்டு
சா்வதேச திரைப்பட விழாவில், தமிழ் குறும்படத்தில் முதலிடம் பெற்ற குறும்பட இயக்குயா் அருந்ததி அரசு ஆத்தூரில் கௌரவிக்கப்பட்டாா்.
கொல்கத்தாவில் நடைபெற்ற சா்வதேச திரைப்பட விழாவில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த இயக்குநா் அருந்ததி அரசுவின் ‘திரு’ என்ற குறும்படம் தமிழ்மொழியில் முதலிடம் பெற்றது.
உலக அளவில் 63 நாடுகளைச் சோ்ந்த 70 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் இந்த போட்டியில் லந்து கொண்டன. 200 தமிழ் குறும்படங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ‘திரு’ குறும்படம் சிறந்த படமாக தோ்வு செய்யப்பட்டு முதலிடத்தை பெற்றது.
இந்த குறும்பட இயக்குநா் அருந்ததி அரசு, ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமாலுதீன் மற்றும் ஆத்தூா் கீழ்பகுதி விவசாய சங்கத் தலைவா் சி.பி.செல்வம் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றாா். அவருக்கு பொன்னாடை போா்த்தி ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவ் கௌரவித்தாா்.