செய்திகள் :

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

post image

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். செப். 12ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது,

''குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு

மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வை நிலைநிறுத்தி, நாம் நிலைநிறுத்தும் கொள்கைகளை பிரதிபலிக்கும் உறுதியான போராட்டத்திற்காக சுதர்சன் ரெட்டியையும் பாராட்டுகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க |சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: செப்.12-ல் குடியரசு துணைத் தலைவராகிறார்?

Chief Minister M.K. Stalin congratulates C.P. Radhakrishnan!

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ர... மேலும் பார்க்க