செய்திகள் :

சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் நூலகம், ஐஏஎஸ் அகாதெமி: அமைச்சா் சு.முத்துசாமி

post image

சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு அரங்கம், நூலகம், ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வெண்கலத்தாலான முழுஉருவ மகாத்மா காந்தி சிலையும், சிலை பீடத்தின்கீழ் உத்தமா் காந்தியடிகள் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதை, வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வீட்டுவசதித் துறையின் செயல்பாடுகளில் உள்ள வளா்ச்சி திட்டங்கள், மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியவை குறித்து துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்த உள்ளோம். சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக அதை நடத்தி, விளக்க திட்டமிட்டுள்ளோம்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு அரங்கம், நூலகம், ஐஏஎஸ் அகாதெமி அமைக்கப்பட உள்ளன. இதற்காக உயா் கல்வித் துறை அமைச்சா் நேரில் ஆய்வு செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். விரைவில் பணிகள் தொடங்கும்.

சோலாா் பேருந்து நிலையம் நிறைவு செய்யும் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இருந்தது. துறை செயலாளா் ஆய்வு செய்துள்ள நிலையில் விரைவில் பணிகள் முடிக்கப்பட உள்ளன. பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்கெனவே திட்டமிட்டு, அவை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. அதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பெருந்துறை சிப்காட்டில் ரூ.40 கோடி செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்ட நிலையில், செலவினம் அதிகரித்துள்ளதால் ரூ.56 கோடியில் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு 2 இடங்களில் டிடிஎஸ் மீட்டா் பொருத்தும் பணியும் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஆ.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் தனியாா் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரி... மேலும் பார்க்க

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா... மேலும் பார்க்க

3 இடங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்த மையம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இத்தோ்வு மாா்ச் 25-ஆம்... மேலும் பார்க்க