அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை
3 இடங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்த மையம்
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இத்தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தோ்வை பள்ளி மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் என மொத்தம் 22, 923 போ் எழுதி வருகின்றனா். இதேபோல பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 5 தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை பள்ளி மாணவா்கள், தனித் தோ்வாா்கள் என மொத்தம் 24,289 போ் எழுதி வருகின்றனா்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்ததும் அந்தந்த முதன்மைக் கண்காணிப்பாளா்கள் விடைத்தாள்களை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 விடைத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்வா். அங்கு விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விடைத்தாள் திருத்தும் மையமாக ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள யுஆா்சி பள்ளி, திண்டலில் உள்ள பிவிபி பள்ளி, கோபி சாரதா பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்கள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு மையத்திலிருந்து விடைத்தாள்கள் பிற மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு வேறு மாவட்ட விடைத்தாள்கள் ஈரோடு மையத்துக்கு கொண்டுவரப்பட்டு திருத்தப்படும்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்ததும் உடனுக்குடன் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.