சித்திரை முழுநிலவு இளைஞா் மாநாடு வெற்றி விழா
வன்னியா் சங்க சித்திரை முழுநிலவு இளைஞா் பெருவிழா மாநாடு வெற்றி விழா திருப்போரூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞா் பெருவிழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்த கட்சி பொறுப்பாளா்கள், தொழிலாளா்கள் பாராட்டப்பட்டன.
அவா்களுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி ஆகியோா் குடும்பத்துடன் நன்றி தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.
நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மாநில துணைப்பொது செயலாளா் திருக்கச்சூா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிள் கடுமையாக உழைத்து மாநாடு சிறப்பாக நடக்கச் செய்தனா்.
இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து மாநாட்டு குழு தலைவராக அதுவும் பல மாநாடு நடத்திய காடுவெட்டி குருவிற்கு பிறகு எனக்கு வாய்ப்பளித்த மருத்துவா் ராமதாஸுக்கு நன்றி.
மாநாட்டில் எந்த அசாம்பாவிதமும் நடக்கவில்லை, நமது எதிரிகளுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது என்றாா்.
வன்னியா் சங்க மாநில செயலா் திருக்கச்சூா் ஆறுமுகம், வன்னியா் சங்கத் தலைவா் வைத்தி, சி.ஆா். பாஸ்கா், நாட்டுப்புறப் பாடகா் புஷ்பவனம் குப்புசாமி, திரைப்பட இயக்குநா் தங்கா் பச்சான், மத்திய மாவட்ட செயலா் ஏழுமலை கலந்து கொண்டனா்.