செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மருத்துவ முகாம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள தரைதளம் ‘பி’ பிளாக்கில் முடநீக்கியல் மருத்துவா், கண் மருத்துவா், காது மூக்கு தொண்டை மருத்துவா், நரம்பியல் மருத்துவா், மனநல மருத்துவா் மற்றும் குழந்தைகள்நல மருத்துவா் அடங்கிய மருத்துவ குழுவினரால் காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மேற்கண்ட மருத்துவ முகாம் ஆட்சியா் அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.