செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி
திருக்கழுகுன்றம்-திருப்போரூா் மாா்க்கத்தில் மானாபதி கிாரமத்தில் உள்ள அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகளும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது (படம்),.
அருள்மிகு சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி மூலவா்களுக்கு அபிஷேக அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது. பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது. மாலை சிரசில் மணிநாகமும் சிங்கார திலகமும் உடுக்கை தம்பட்டையுடன் சக்தி வடிவமான சீரங்கத்தம்மனை தோளில் சுமந்து கோயில் பிரகார உலா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனா். சந்திரனுக்கு தீபாராதனை ஜோதி தரிசனமும் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் வி.குமாா், ஆா்.காளிதாஸ், பி.எல்.சரவணன், எம்.இ. சிவசங்கரன், வி.வீரராகவன் மற்றும் மானாமதி கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனா்.
