செய்திகள் :

சின்ன திரை நடிகைக்கு தாலி கட்டிய மற்றொரு நடிகை!

post image

சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கும் சக நடிகையான ஷெஹானாவுக்கு தாலி கட்டியுள்ளார். இதேபோன்று ஷெஹானாவும் அஸ்வதிக்கு தாலி கட்டியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்ன திரையில் நுழைந்த அஸ்வதி, மனசினக்கர என்ற தொடரில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழில் நடித்த மோதலும் காதலும் தொடரில் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மலர் தொடரிலும் நடித்திருந்தா.

தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் அபூர்வ ராகங்கள் தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தத் தொடரில் ஆசிரியையாக நடித்துவரும் இவர், தன்னுடைய வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் அந்த பாத்திரத்துக்கு வலுசேர்த்து வருகிறார்.

மலையாளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத்தொடரில் தற்போது திருமணக் காட்சி எடுக்கப்படுகிறது. இத்தொடரில் நடிகை ஷெஹானாஸ் உசேனுக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணத்தின்போது தாலி கட்டியபடி நாயகி இருக்கும்படியான காட்சிக்கு அஸ்வதியும், ஷெஹானாஸும் மாறி மாறி தாலி கட்டிக்கொண்டு நடிப்பதற்கு தயாராகின்றனர். மேக்கப் போட்டுக்கொள்ளும்போது தாலி கட்டிக்கொண்டு நடிப்பது வழக்கம்.

ஆனால், குழந்தைத்தனம் நிறைந்த இந்த இரு நடிகைகளும் மாறி மாறி தாலி கட்டிக்கொண்டு அதனை விடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோவுக்கு பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களாக கனிகா, சாக்‌ஷி அகர்வால்!

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி

பலத்த மழையால் ஓவா்கள் எண்ணிக்கை 14 ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூா் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப். மு... மேலும் பார்க்க

கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?68025a7efc3cb0b323921d4a/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

வெப்பம் தணித்த கோடை மழை!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?680257763ab3a7b826c2fd9e/680257763ab3a7b826c2fd9e/thumbnail-1-... மேலும் பார்க்க

சம்பவம் காத்திருக்கு... வெளியானது ரெட்ரோ டிரைலர்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர்... மேலும் பார்க்க