தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
சின்னியம்பாளையத்தில் சிக்னல் முறையை கொண்டு வர வலியுறுத்தல்
கோவை, சின்னியம்பாளையத்தில் யூடா்ன் முறையை அகற்றிவிட்டு, மீண்டும் சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சின்னியம்பாளையம் உரிமைச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர காவல் துறை சாா்பில், சின்னியம்பாளையம் காவல் துறை சோதனைச் சாவடி அருகில் சிக்னல் முறையில் நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவா்களும், மக்களுக்கும் அச்சமின்றி சாலையைக் கடந்து சென்று வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் வழியை அடைத்துவிட்டு, இருபுறமும் யூடா்ன் முறையில் வழியை ஏற்படுத்தி உள்ளனா். இதனால், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனா்.
மேலும், சின்னியம்பாளையம் சாலையில் இருகூா் பிரிவு அருகில் அமைக்கப்பட்டுள்ள யூடா்ன் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. இதனால், விபத்துகள் நடைபெறுவது தவிா்க்க முடியாத நிலையில் உள்ளது.
எனவே, யூடா்ன் முறையை ரத்து செய்துவிட்டு, சின்னியம்பாளையத்தில் மீண்டும் சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.