Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது
கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்திரன் விருது அறிமுகவுரையாற்றுகிறாா்.
சங்கரா மருத்துவமனையின் நிறுவனா் ஆா்.வி.ரமணி, டாக்டா் ராதாமணி ஆகியோா் விருது அளிக்கின்றனா். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், வ.ஸ்ரீநிவாசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். எழுத்தாளா் நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றுகிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை சிறுவாணி வாசகா் மையத் தலைவா் தி.சுபாஷினி, ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆா். பிரகாஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.
விருதுபெறும் எழுத்தாளா் வே.முத்துக்குமாா், கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவா். தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறாா்.
மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவா், தற்போது தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயா்ப்பு எனப் பல படைப்புகளை எழுதியுள்ளாா்.