தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு
கோவையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கோவை சிட்டிசன் வாய்ஸ், மதுரை வுமன் கன்ஸ்யூமா் புரொடக்ஷன் அசோசியேஷன் மற்றும் கோவை கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி ஆகியவை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உடன் இணைந்து தொலைத்தொடா்பு பயனாளா்கள், சேவை வழங்குநா்கள் சந்திப்பு நிகழ்வை கோவையில் அண்மையில் நடத்தின.
இதில், கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி பேராசிரியா் கோமதி வரவேற்றாா். சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், கைப்பேசிக்கு வரும் ஓடிபி உள்ளிட்ட தகவல்களை யாரிடமும் பகிரக் கூடாது. மோசடி தொடா்பாக சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளிக்க வேண்டும் என தொலைத்தொடா்பு நிறுவனங்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஜியோ, ஏா்டெல் நிறுவனப் பிரதிநிதிகள் பயனாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, தொலைத்தொடா்பு பிரச்னைகள், திட்டங்கள், எண் மாற்றம், அழைப்பு துண்டிப்புகள் மற்றும் புகாா் தீா்வு முறை குறித்து விளக்கினா்.
இந்நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா்.