செய்திகள் :

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

post image

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிபிஐ இயக்குநராக 2 ஆண்டு பதவிக் காலத்துக்கு பிரவீண் சூட், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றாா். வரும் 24-ஆம் தேதியுடன் அவரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழு கடந்த திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மே 24-ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டு காலத்துக்கு பிரவீண் சூட்டின் பணி நீட்டிப்பை அமைச்சரவையின் நியமனக் குழு அங்கீகரித்தது.

கா்நாடக பிரிவைச் சோ்ந்த 1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டபோது கா்நாடக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி வந்தாா்.

1964-ஆம் ஆண்டு, ஹிமாசல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் பிறந்த பிரவீண் சூட், தில்லி ஐஐடியில் கட்டட பொறியியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு 22 வயதில் ஐபிஎஸ் பணியில் சோ்ந்தாா்.

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெர... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க