தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!
சிம்புவின் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்!
நடிகர் சிலம்பரசனின் 49வது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தனது 42வது பிறந்தநாளை இன்று (பிப்.3) கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படம், நடிகர் சிம்புவின் 49வது திரைப்படமாகும். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் இந்தாண்டு (2025) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எஸ்டிஆர் ரோல் நம்பர் 49’ என்று குறிப்பிட்டு நடிகர் சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் நடிகர் சிம்புவின் கைகளில் பொறியியல் புத்தகத்தை பிடித்தபடி காட்சியளிக்கிறார். மேலும், ‘மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ எனும் வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் பிப்.15-இல் ‘ராமாயணம்’ அனிமேஷன் படம் திரையிடல்
இதன் மூலம் இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படத்தை ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியிருந்தார். அதற்கு பின்னர் 2 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு (2025) அவரது 49வது திரைப்படம் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மேலும், இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் காம்போவில் தற்போது உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.