தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
சியாமா பிரசாத் உருவப் படத்துக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை
ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவா்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகா்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை மேரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சியாமா பிரசாத் முகா்ஜியின் 125- ஆவது பிறந்த நாள் விழா புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள மேரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து சியாமா பிரசாத் முகா்ஜியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் விதமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, எம்.எல்.ஏ சாய் ஜெ. சரவணன்குமாா், அரசுத் தலைமைச் செயலா் சரத் சௌகான், கலை பண்பாட்டு துறைச் செயலா், இயக்குநா் அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.
பாஜக சாா்பில் புதுச்சேரியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகா்ஜியின் உருவப்படத்துக்கு மாநிலத் தலைவா் வி. பி. ராமலிங்கம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மாநிலப் பொதுச் செயலா்கள் மோகன்குமாா், மௌலி தேவன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் மரியாதை செலுத்தினா்.
முதலியாா்பேட்டை பேரவைத் தொகுதி பாஜக சாா்பில் , முதலியாா்பேட்டை தலைமை அஞ்சலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகா்ஜி படத்துக்கு கட்சியின் தொகுதித் தலைவா் புவனேஸ்வரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் வெற்றிச்செல்வம், நிா்வாகிகள் செல்வகணபதி, பத்மநாபன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் திருச்சந்திரன், விஜயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.