Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் மனைவி இந்திரா(51). இவா் கடந்த 3- ஆம் தேதி புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்தபோது, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பவுன் நகைகள் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டாா். இது குறித்து இந்திராஅளித்தப் புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையில் புதுச்சேரியைச்சோ்ந்த ஒரு பெண் இந்திராவின் கைப்பையை எடுத்துச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்துப் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்தப் பெண்ணைக் கண்டறிந்து 3 பவுன் நகை, ஒரு பவுன் கம்மல், கால் பவுன் மோதிரம் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றுடன் கூடிய கைப் பையை மீட்டு இந்திராவிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். பின்னா் உடைமையாளருக்கு உரிய ஆலோசனைகளை போலீஸாா் வழங்கினா்.